மூடுக

    திரு.த.சந்திரசேகரன்

    திரு.த.சந்திரசேகரன்
    • பதவி: முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி

    புதுச்சேரி மாநிலத்தில், நீதித்துறையில் தலைமை நீதிபதியாக பணிபுரிந்துகொண்டிருக்கும் மதிப்பிற்குரிய திரு.த.சந்திரசேகரன் அவர்கள் 04.02.1968-ம் ஆண்டு திருநெல்வேலியில் திரு.வி.தங்கராஜ் மற்றும் திருமதி.டி.நாகமணி ஆகிய இவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் திருமதி.தமிழ்செல்வி மற்றும் இரு மகன்கள் திரு.யோகேஷ் மற்றும் திரு.தினேஷ் ஆவார்கள். மேலும் திரு.த.சந்திரசேகரன் அவர்கள் தனது பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக விளங்கியுள்ளார். திரு.த.சந்திரசேகரன் அவர்கள் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்ற போது படிப்பு மட்டும் இன்றி விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியுள்ளார் என்பதற்கான சான்று, கேரம் விளையாட்டில் மூன்று வருடங்களாக தலைமையாகவும், பதக்கங்களையும் அள்ளி குவித்துள்ளார். தனது எம்.எல்., படிப்பினை முடித்து வழக்கறிஞராக சேவை செய்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகும் “சட்ட செய்திகள்” என்ற நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக சுமார் ஒரு வருடகாலமாக சேவை செய்துள்ளார். மேலும் தனது தனித்திறமையால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட மெரிட்-கம்-சீனியாரிட்டி தேர்வில் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு 02.03.1998 முதல் நீதிபதியாக பணியாற்றிகிறார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்காணிப்பு பிரிவில், கூடுதல் பதிவாளராக மூன்று வருடங்கள் பணியாற்றி, பின்பு ஸ்மால் காஸ் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். கடந்த 25 வருடங்களாக நீதிபதியாக பணியாற்றி தற்போது தலைமை நீதிபதியாக புதுச்சேரியில் பொறுப்பேற்று தன் சேவையினை தொடர்ந்து செய்து மக்களின் நல்லெண்ணத்தை பெற்று தனிதன்மையோடு விளங்கிவருகிறார்.